2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘நானே பிரதமர்’

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.பி.மதன்

“தான் விரும்பியதைச் செய்யக்கூடிய சுதந்திரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு உண்டு. எது எவ்வாறு இருப்பினும், நாட்டின் பிரதமர் நானே” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

புத்தாண்டின் முதலாவது பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.   இதன்போது, 2017ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.  

 இதற்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, “நான் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளதாகவும் அச்சந்தர்ப்பத்தில், மஹிந்த ராஜபக்ஷ தான் கூறியதைப்போன்று செயற்பட முயற்சிக்க முடியும்” எனவும் சுட்டிக்காட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .