Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மார்ச் 10 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரமான பயங்கரவாதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச எம்.பி, தேரர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர் என்றும் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அவர், 'பிரதி சபாநாயகர் அவர்களே, உடுவே தம்மாலோக்க தேரர் கைதுசெய்யப்படுவது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியிருந்தேன். இன்று (நேற்று) பதிலளிப்பதாகக் கூறினர். என்ன நடந்தது?' என்று வினவினார். இதன்போது எழுந்த சபை முதல்வரும் எம்.பி.யுமான லக்ஷ்மன் கிரியெல்ல, 'இவ்விடயம் நீதிமன்றத்தின் முன்னிருக்கின்றது. அதனைப்பற்றி இங்கு பேசுவது, தேரரை அகௌரவப்படுத்தும் நடவடிக்கையாகும்' என்று சுட்டிக்காட்டியதுடன், 'அவரைக் கைதுசெய்தமை வருத்தமளிக்கின்றது' என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது இடைமறித்த விமல் வீரவன்ச, 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நீக்குவதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அண்மையில் அறிவித்திருந்தார். அப்படிச் செய்தால், பயங்கரமான பயங்கரவாதிகள் விடுவிக்கப்படுவர். பயங்கரவாதிகளை விடுவிக்கும் அரசாங்கம் பல்வேறு குற்றஞ்சாட்டின் பேரில் தேரர்களைக் கைதுசெய்து பழிவாங்குகின்றது' என்றார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
EBUNUZA Thursday, 10 March 2016 11:44 PM
HAA HAA NEENGALUM PALLAANDU ULLEIRUKKA WENDIYAWAR AANA UNGALA WELIYE WITTATHU YAARU ???????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago