Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 04 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள அனைத்து சோசலிஷக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில், ஒரு பொதுவான சோசலிஷக் கூட்டணியொன்றை அமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முன்னிலை சோசலிஷக் கட்சி தெரிவித்தது.
இது தொடர்பாக திட்டமிடல் குறித்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியன்று, சுகததாச விளையாட்டரங்களில் வைத்து தெரிவிக்கப்படும் என்று, குறித்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சேனதீர குணதிலக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேலும் தெரிவிக்கையில்,
'இந்த நாட்டில் கட்டமைப்பு மாற்றமொன்று தேவைப்படுகின்றது. நவ தாராளவாத கொள்கை, சோசலிசக்கட்;டமைப்பால் பிரதியீடு செய்யப்படல் வேண்டும். இதன்மூலம், அரச நிதிகள் கொள்ளையடிக்கப்படாமல், குரல்களற்ற மக்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்படல் வேண்டும்' என்று இதன்போது அவர் கூறினார்.
'புதிதாக கொண்டுவரப்படும் முன்னணி, ஹம்பாந்தோட்டை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குவதோடு, உரிமைகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் வர்க்கத்துக்கு சார்பாக அமையும்.
மேலும், விவசாயிகளின் பரம்பரைக்கான கட்டாயக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை, இந்தப் புதியக்கட்சி உறுதியளிக்கும். இவை, தற்போதுள்ள ஆட்சியால் கவனத்துக்கு கொள்ளப்படாதவை ஆகும்' என்றும் அவர் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago