2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

'புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார்'

George   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கையை வந்தடைந்த அவர், வெளிவிவகார அமைச்சில் வைத்து உரையாற்றுகையில் இதனை கூறினார்.

இங்கு உரையாற்றிய நிஷா பிஸ்வால், "ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான வளங்களுக்கான அர்ப்பணிப்புடன், மீள்குடியேற்றத்துக்கும் கல்விக்கும் சம்பூரில்  நாங்கள் உதவி வழங்கவுள்ளோம்.

அத்தோடு, இந்நாடானாது தனது முழுமையான ஆற்றலளவை அடைவதற்கு, இந்த விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் புதிய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் எதிர்பார்ப்புடன் உள்ளோம்" எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .