2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ரணிலுக்கு சுப்பர் பவர் வேண்டுமாம்’

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் ஊடாக, சுப்பர் பவர் அமைச்சராக மாற, பிரதமர் ரணில் விக்கிமசிங்கவே முயன்று வருகின்றார்” என, சோசலிச மக்கள் முன்னணியின் பிரதிநிதியான முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  

“ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாது என்ற காரணத்தினால், எப்படியாவது அந்த அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், இந்தச் சட்டத்தைக் கொண்டுவர, பிரதமர் முயற்சிக்கின்றார்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்த அரசாங்கத்தை, எந்த வகையிலும் நல்லாட்சி அரசாங்கம் எனக் கூற முடியாது. இது, விஷ ஆட்சி அரசாங்கமாகும்.  இதனால் இந்த அரசாங்கம், நாட்டுக்கு மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினருக்கும் விஷம் போன்றது” என்றார். 

“அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கம் வகித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் மட்டுமே செயற்படுத்தப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள், நாட்டுக்கு எப்போதும் நன்மையாக அமையப்போவதில்லை” என்று, திஸ்ஸ விதாரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .