Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
ஹம்பாந்தோட்டை மாஹம்புர துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட 1.3 பில்லியன் ரூபாயை, சீனாவுக்கு மீண்டும் கொடுப்பது தற்போதைய அரசாங்கத்துக்கு பெரும் சிரமமான காரியமாகும்.
ஆகையால்தான், துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானித்ததாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,
“மாஹம்புர துறைமுகத்தினால், ஆகக்கூடுதலான நட்டம், நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையால்தான், மாற்று ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டோம். அவை தொடர்பில் சீன அரசாங்கத்துடன் கலந்துரையாடினோம்.
“சீன அரசாங்கம், இரண்டு நிறுவனங்களை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தது. அதிலொரு நிறுவனம் 1.1 பில்லியன் டொலர் பெறுமதியை முன்வைத்தது. மற்றொரு நிறுவனம் 1.4 பில்லியன் டொலர் பெறுமதியை முன்வைத்தது. ஆகையால்தான், அந்த நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடடோம்” என்றார்.
இதன்கீழ், பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அதற்காக இன்னும் சில காலங்கள் தேவைப்படுகின்றன. ஆகையால், திட்டமிட்டதன் பிரகாரம் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று, துறைமுகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம், நெடுஞ்சாலைகள் நிர்மாணம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களால், கடன் சுமைக்கு நாடு தள்ளப்பட்டது. இந்தக் கடனை, கடந்த அரசாங்கமே செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அது தொடர்பில் கடந்த அரசாங்கம், ஆக்கபூர்வமாக எவ்வித நடவடிக்கைகயை எடுக்கவில்லை. அந்தக் கடனை, இந்த நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago