Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 05 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உணர்வும் செயற்பாடும் நியாயமானவையே. அவரது நிலையில் யாராக இருந்தாலும் இதனையே செய்திருப்பார்கள்” என சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.
ரிஷாட் பதியுதீன், தனது சமூகத்துக்காக குரல் கொடுப்பதைத் தவறென்று கூறமுடியாது. ரிஷாட் பதியுதீன் பிறந்து வசித்த இடத்தில் இருந்து, ‘வடக்கிலிருந்து 24 மணித்தியாலத்துக்குள் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்’ என்று புலிகள் விடுத்த எச்சரிக்கையால் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
அங்கிருந்து வெளியேறிய மக்கள், புத்தளத்தில் அகதிகளாக வசித்தனர். அங்கிருந்து அரசியலுக்கு வந்து அமைச்சராக இன்று பதவிவகிக்கின்றார். தமது சமூகத்துக்கு போராடும் இந்த விடயத்தில் முஸ்லிம், தமிழர், சிங்களவர் என்று பிரித்துப்பார்க்கக் கூடாது. யாராக இருந்தாலும் இதனைத் தான் செய்திருப்பார்கள்.
மேலும், சிங்கராஜ வனப்பிரதேசத்தை பாதுகாக்கும் திட்டத்தில் அதனது நிலப்பரப்பை விஸ்தரிப்பதற்கு நானே நடவடிக்கை எடுத்தேன். நான், அதிகரித்துக் கொடுத்த பரப்பும் சேர்த்துதான் சிங்கராஜ வனம் உள்ளது.
காடு என்று வர்த்தமானியில் எல்லைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட பகுதியில் குடியேற்றங்களோ, தனிநபர் உரிமையோ இருக்க முடியாது. எனினும், வில்பத்துவில், ரிஷாட் கூறும் இடத்தில் பழைய பாடசாலை உள்ளிட்டவற்றின் சிதைவுகள் உள்ளன. அதற்கான புகைப்பட ஆதாரத்தையும் அவர் காண்பித்துள்ளார். எனினும், இந்த விடயத்தில் அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago