Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவ்விருவரையும் அழைத்துவந்து கொஹுவளை பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகள் நடத்தியபோது, கணவனையும் தன் மகளையும் விட்டுவிட்டு அப்பெண், தனது கள்ள கணவனுடன் வெளியேறிய சம்பவம் தெரியவந்துள்ளது.
காணாமல் போனதாகக் கூறப்படும் பெண், நுகேகொடையில் உள்ளஅதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனை கூட்டாரத்துக்குள் இருந்து விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை பாணந்துறை பகுதியைச்சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார். இதுதொடர்பில், அப்பெண்ணின் உறவினர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அம்முறைப்பாட்டுக்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாட்டுக்கு இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாகச் சென்றிருந்த இந்தப் பெண், ஒருவருடகாலமாக கணவனுடன் அலைபேசியில் உரையாடியது மட்டுமன்றி, பணத்தையும் அனுப்பியுள்ளார். அத்துடன் வீட்டாரின் சுகதுக்கங்களையும் விசாரித்துள்ளார்.
ஒருவருடம் ஒருமாதம் கடந்ததன் பின்னர், மனைவியிடமிருந்த தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. தன் மனைவிக்கு எந்தவிதமான ஆபத்தும் இடம்பெற்றுவிடக்கூடாது என்றெண்ணிய கணவன், விஹாரைகள் மற்றும் கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டுள்ளார்.
தன்னுடைய வழிபாட்டுக்கு எவ்விதமான பதிலும் கிடைக்காமையால், தன்னுடைய ஒரே மகளை கடும் சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்துவந்துள்ளார்.
எனினும், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்த அவருடைய உறவினர்கள், காணாமல் போனதாக தேடிக்கொண்டிருக்கின்ற அவருடைய மனைவியை, நுகேகொடையில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திகொண்டு வந்த கணவன், தன்னுடைய மனைவி, அதிர்ஷ்டலாபச் சீட்டு விற்பதையும் அந்த கூடாரத்துக்குள் இருந்தவருடன் மிகவும் அன்னியோன்யமாக இருந்ததையும் கண்டு கதிகலங்கியுள்ளார். அத்துடன், அந்த கூடாரத்துக்கு அருகில் சென்று சண்டையிட்டுள்ளார்.
விடயம் பொலிஸ் நிலையம் வரையிலும் சென்றதையடுத்து, அனைவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
தன்னுடைய முதல் கணவனுடன் பாணந்துறையில் உள்ள வீட்டுக்குச் செல்வதற்கு மறுத்த அந்த பெண், தனது கணவனுக்கு அருகில் இருந்த தன்னுடைய 11 வயதான மகளை திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றும் ஹோமாகமவில் உள்ள வீட்டில் வாழப்போவதாகவும் கூறி தன் கள்ள கணவனின் கையை பிடித்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தான், வெளிநாட்டில் வேலைசெய்யும் போது, தவறுதலான இலக்கத்துக்கு அழைப்பொன்றை ஏற்பட்டுத்திவிட்டதாகவும் அந்த அழைப்பின் பின்னர் உருவான கள்ளக்காதலை அடுத்தே, கள்ளக் காதலனை அப்பெண் கரம்பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
வெளிநாட்டுக்குப் பயணமாக அந்தப்பெண், வெளிநாடு சென்று இரண்டு வருடங்களின் பின்னர் நாடு திரும்பிவிட்டதாகவும் அறியமுடிகின்றது.
10 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
56 minute ago
2 hours ago