Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“பெரும்பான்மை காரணமாகவே மூவரது கையெழுத்துடன், எல்லை நிர்ணய அறிக்கையை, உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கத் தீர்மானித்தேன்” என்று, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், தெரிவித்தார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின், எல்லை நிர்ணய அறிக்கை நேற்றைய தினம், அமைச்சரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது,
“எல்லை நிர்ணய அறிக்கையை இன்றைய தினம் (நேற்று) உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிப்பதாக கூறினேன். இதில் இருவர் கையெழுத்திடவில்லை. மீண்டும், ஒரு தடவை அறிக்கையை வாசித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.
இது தொடர்பில், அமைச்சருக்கு அறிவிக்கவில்லை. எனினும், பெரும்பான்மையானவர்கள் கையெழுத்திட்டுள்ளமையால் அறிக்கையை சமர்ப்பிக்க முடிவு செய்தேன். அறிக்கையை அமைச்சர் இன்று ஏற்காததால், கையெழுத்திடாமை தொடர்பில் அவருக்கு கடிதமொன்றை உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கிறேன்.
இன்று (02) அறிக்கையை சமர்பிப்பதாக வௌ்ளிக்கிழமை அறிவித்து, கடந்த சனிக்கிழமை மூன்று பேர் ஒன்றுகூடி கையெழுத்திட்டோம். விரைவில் ஏனைய இருவரின் பதிலைப் பெற்று அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கின்றேன்.
மேலும், இந்த அறிக்கையை மூன்று பிரிவாக உருவாக்கியுள்ளோம். முதலாவது, அறிக்கை மூன்று மொழிகளில் புத்தகமாக அச்சிடப்பட்டுள்ளது. இரண்டாவது, மூன்று மொழிகளில் அறிக்கையாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவது, ஆங்கில மொழியில் இறுவட்டில் உள்ளது.
இந்த அறிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் உறுப்பினர் இருவரே கையெழுத்திடவில்லை. சாலிய மெத்திகொட மற்றும் மிஸ்பா ஆகியோரே இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை” என்றும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago