Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
‘பல்கலைக்கழகங்களின் அருமை தெரியாததன் காரணமாகவே பல்கலைக்கழக மாணவர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவது மட்டுமன்றி தமது காலத்தை வீணடிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வரலாற்றை எடுத்துக் கூறவேண்டும்’ என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
சேர்.பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 93ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பொன்னம்பலம் அருணாச்சலம், இந்த நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டதை யாராலும் மறக்க முடியாது.
அவர் இன, மத, மொழி வேறுபாடுகள் பார்க்கவில்லை. அனைவரும் சமம் என்று மதித்து முழுநாட்டு மக்களுக்காகவும் பாடுபட்டு உழைத்தவர். சமயங்களுக்கிடையில் போட்டி, எதிர்ப்புகள் இருந்த காலத்தில் அதிலிருந்து வெளிவந்து, ஒரு நாடு-ஒரு மக்கள் என்ற ரீதியில் செயற்பட்டவர்.
இலங்கையில் பல்கலைக்கழகம் உருவாக முன்னின்று செயற்பட்டமை, அவர் நாட்டுக்காக ஆற்றிய பல சேவைகளில் மிக முக்கியமானதாகும். அந்த வரலாற்றை மறக்க முடியாது” என்றார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago