Janu / 2026 மார்ச் 11 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் நேரடித் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதன்கிழமை (11) அன்று கொழும்பில் விசேட கலந்தாய்வொன்றை நடத்தினார்.
"டித்வா" சுழற்காற்றுப் பேரழிவிலிருந்து நாடு மீண்டு வரும் சூழலில், காலி கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியக் கப்பல் "ஐரிஸ் டேனா" (IRIS Dena) மூழ்கடிக்கப்பட்டமை, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இக்கட்டான சூழலிலிருந்து நாட்டைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகப் பின்பற்ற வேண்டிய 04 முக்கிய முன்னுரிமைத் துறைகளை அவர் முன்வைத்தார்:
01. தேசிய எரிசக்தி அவசரநிலையைப் பிரகடனப்படுத்தல் (National Energy Emergency)
02. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானத்தைப் பாதுகாத்தல்
03. ஏற்றுமதிப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கக் கடல் காப்புறுதித் திட்டம்
04. இராஜதந்திர நடுநிலைமை மற்றும் IORA தலைமைத்துவம்
எதிர்க்கட்சித் தலைவரின் அறைகூவல்:
"குறை கூறுவதை விடுத்துத் தீர்வுகளை முன்வைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம். சர்வதேச எரிசக்திச் செலவு அதிகரிப்பைச் சாட்டாகக் கொண்டு, உழைக்கும் மக்கள் மீது 18 சதவீத டிஜிட்டல் VAT போன்ற மேலதிக வரிகளைச் சுமத்தி நசுக்க அரசாங்கம் முற்படக் கூடாது." என சஜித் பிரேமதாச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago