2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

10,000 பொலிஸ் அதிகாரிகளை இணைக்கத் திட்டம்

S.Renuka   / 2025 ஜூலை 27 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 10 ஆயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மையப்படுத்தி சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை தடுப்பதனூடாக போதைப்பொருள் பாவனையை குறைக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X