2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

1800 மணித்தியால கோரத் தாண்டவம் :704 பேர் மரணம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதும் 2025.11.16 ஆம் திகதி முதல் 2025.11.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலையின் 1800 மணித்தியால கோரத் தாண்டவம் காரணமாக சுமார் 704 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 1,118,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 309,607 ஆகும்.

மண்சரிவு, வெள்ளம், காற்று, கற்பாறை சரிவு போன்ற காரணிகளால் இத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைகளின்படி பதுளை மாவட்டம் 238,   கண்டி மாவட்டம் 251, நுவரெலியா மாவட்டம் 132, கேகாலை மாவட்டம் 72, குருநாகல் மாவட்டம் 58 என்ற அடிப்படையில் இந்த மரணங்கள் பதிவாகி உள்ளன. 

சில பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளின் மீட்பு பணிகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை. அதனால் மரணங்கள் 1000 யை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

வீதி அபிருத்தி அதிகார சபைக்கு சாந்தமான 205 பாதைகளும் சேதமடைந்துள்
ளன.பிரதானமாக கொழும்பு கண்டி போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்

டிருந்த நிலையில் இன்று திங்கள் முதல் வழமைக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மலைநாட்டிற்கான புகையிரத பாதைகளும் சேதமடைந்துள்ளன.

எனினும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையான 704 இல் 300 பேர்கள் அளவில் இதுவரையில் காணாமல் போனவர்களாகவே கருதப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 1,494 பாதுகாப்பு தங்குமிடங்களில் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு, உடை என்று மனித நேய உதவிகள் தேவைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிகமான பிரதேசங்களில் தொடர்ந்தும் குடிநீர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலை தொடர்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வர்த்தக, வாணிப , வியாபார நிலையங்கள் முற்றாக பாதிக்கப்பட்டு மக்கள் ஜீவனோபாய
த்தை இழந்து தவிக்கின்றனர். 

மீண்டெழுவதற்கு நிவாரண உதவிகளே கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

அதனால் இயன்றவரை இவர்களுக்கு மனிதாபிமான உணர்வோடு நேசக்கரம் நீட்ட வேண்டியது வசதியாக வாழும் அனைவரதும் பொறுப்பாகும்.

அமீர் ஹூசைன்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X