2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

“இலங்கைக்கு 31 பில்லியன் ரூபாய் தேவை”

Janu   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நாசமாக்கிய பெரும் வெள்ளத்தைத் தொடர்ந்து, விவசாய, நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சேதமடைந்த கால்வாய்களை புனரமைப்பதற்காக,  நவம்பர் 28 ஆம் திகதி நிலவரப்படி இலங்கைக்கு  31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் தொடர்பு தெரிவிக்கிறது.

இந்த சேதத்திற்கு பின்னர் உடனடியாக, அமைச்சகம் சர்வதேச உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன்  கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் காய்கறிகளை மீள் உற்பத்திக்கு , 15 பில்லியன் ரூபாய் நிதியை கோரியுள்ளது.

கூடுதலாக, சிறு நீர் பாசன குளங்களை புனரமைக்க 4.8 ​ பில்லியன் ரூபாய் , அணைக்கட்டுகளை பழுதுபார்க்க 900 மில்லியன் ரூபாய், சிறு நீர் பாசன முறைகளுக்கு 8.3 பில்லியன் ரூபாய்,  கால்வாய்களுக்கு 1.8 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது. 

510,000 ஹெக்டேர் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மீண்டும் பயிரிட, அரசாங்கம் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து  112,000 மெட்ரிக்  டன் யூரியா, 30,000 மெட்ரிக் டன் MOP மற்றும் 30,000 மெட்ரிக் டன் TOP உரத்தை நாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X