2025 மே 03, சனிக்கிழமை

2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் சிறை

Editorial   / 2021 ஜூலை 06 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கா, தங்கையான 15 மற்றும் 12 வயதான சிறுமிகள் இருவரையும் அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவ்விரு சிறுமிகளின் சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

பிரதிவாதியான சிறிய தந்தையின் மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளும் எவ்விதமான சந்தேகங்களுக்கும் இடமின்றி நிரூபணமாகியது அதனையடுத்தே அச்சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் இலக்கம் 2 மேல் நீதிமன்றத்தின் முன்னோடி நீதிபதியான பேராசிரியர் சுமுது பிரேமசந்திர, பிரதிவாதிக்கு கடூழிய சிறைத்தண்டனையை விதித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X