Thipaan / 2015 ஜூலை 05 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தல, கஹபொல பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 20 வயதான யுவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தல பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி கடந்த ஜனவரி 28ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிலியந்தல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே 21 மற்றும் 24 வயதான இருசந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு அவரது சடலம் பொல்கொட வன பிரதேசத்தில் எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago