2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கையில் சூரிய மின்னுற்பத்தி பூங்கா

Gavitha   / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியபலாண்டுவ பிரதேசத்தில், 100 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட சூரியசக்தி மின்னுற்பத்திப் பூங்காவை ஸ்தாபிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.

தற்போது, சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வளங்களைப் பயன்படுத்தி, மின்னுற்பத்தி செய்யும் நடைமுறை தொடர்பில், கூடுதல் அக்கறை செலுத்தப்படுகின்றது. இங்கு, சூரிய சக்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது.

11.3 மெகாவொட் அளவிலான சூரிய மின்சாரமானது, தற்போது இலங்கை மின்சார அமைப்புடன் இணைக்கப்படுகின்றது. இலங்கையில் சூரியசக்தி மின்னுற்பத்தியினை மேலும் அதிகரிக்கும் நோக்கில், இதுவரையில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

100 மெகாவொட் அளவைக் கொண்ட 3 சூரியசக்தி மின்னுற்பத்தி பூங்காக்களை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதன் முதற் கட்டமாக, சியபலாண்டுவ பிரதேசத்தில், 100 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட சூரியசக்தி பூங்காவை ஸ்தாபிப்பதற்கான, சாத்தியவள அறிக்கையினை மேற்கொள்வது தொடர்பில், மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே, அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .