2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தாஜுதீனின் சடலம் தொடர்பான விவகாரம்; மீள் திருத்தத்தை ஆராய முடிவு

Gavitha   / 2017 ஜனவரி 10 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான் 

தன்னைக் கைதுசெய்யவேண்டாம் என்று, கொழும்பு மாவட்டத்தின் முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மீள் திருத்த விண்ணப்பத்தை, மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆராய்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி   ஆர். குருசிங்க, நேற்று (10) கட்டளையிட்டார்.  

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சடலத்தைச் சோதனை செய்த போது, சடலத்தின் சில பாகங்கள் காணமல் போயுள்ள சம்பவம் தொடர்பில், தன்னைக் கைதுசெய்யவேண்டாம் என்று, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர், மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகவே, ஆனந்த சமரசேகர, சட்டத்தரணி ஷவேந்திர பெர்ணான்டோ ஊடாக, மீள் திருத்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருந்தார்.  

இதேவேளை, சைட்டம் நிறுவனத்திலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எடுத்து சென்றிருந்த எலும்புகள் மற்றும் டி.என்.ஏ அறிக்கைகள், இதுவரையிலும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று, அரச சட்டத்தரணி டிலான் ரத்னாயக்கவினால், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. 

இதனையடுத்தே, திருத்த விண்ணப்பத்தை மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆராய்வதற்கு, நீதிபதி   கட்டளையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .