2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நுகர்வோர் அதிகார சபையின் வருமானம் அதிகம்

Gavitha   / 2017 ஜனவரி 22 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் அதிகார சபையினால், கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 21,819 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, வர்த்தகர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம் காரணமாக, 90 மில்லியன் ரூபாய் வருமானம், சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நேற்று அறிவித்தது.

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, 2016இல் கிடைக்கப்பெற்ற வருமானம், 33 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் மாத்திரம், 21 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சு தெரிவித்தது.

அரச அமைப்பாக இயங்கி வரும் இந்த நுகர்வோர் அதிகார சபை, நுகர்வோரைப் பாதுகாப்பதையும் நியாயமான சந்தைப் போட்டிநிலை நிலவுகின்றமையை உறுதிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .