2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வரட்சி போய் மழை வந்தது

Gavitha   / 2017 ஜனவரி 22 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்து வருகின்றமையால், கடந்த சில நாட்களாக, நாட்டில் நிலவி வந்த வரட்சி நிலை, சாதாரண நிலைக்கு மாறி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம், நேற்று தெரிவித்தது.

நேற்றுப் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில், அதிகூடிய மழை வீழ்ச்சியாக, வாகரையில் 94.2 மில்லிமீற்றர் பதிவாகியுள்ள அதேவேளை, அரலகன்வில பகுதியில், 62.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக,  வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் 52.1 மில்லிமீற்றர், பாசிக்குடாவில் 55 மில்லிமீற்றர், பொலன்னறுவையில் 40.9 மில்லிமீற்றர்  மற்றும் கொழும்பில் 16 மில்லிமீற்றர் என்ற அளவில், மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளது.

மேலும், இனிவரும் சில நாட்களுக்குள், நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்தி, கிழக்கு, மத்தி, ஊவா மற்றும் தென் மாகாணங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பிற்பகல் 2 மணிக்கு பின்னரே, இந்த நிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக, நாட்டின் 18 மாவட்டங்களில் நிலவிய வரட்சி காரணமாக, சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .