Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 24 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவையிலுள்ள 7 அமைச்சர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தெரிவித்துள்ள மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உபாலி கொடிகார, அவர்களது இந்தப் பொல்லாத குற்றங்களை ஒழித்து வைத்துக்கொள்வதற்காக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு உதவ எத்தணிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிரணியின், மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதொன்றாக மாற்றுவதை விடுத்து, நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கானத் தீர்வுகளைக் காணவேண்டும் என, பல விடயங்கள் இருக்கின்றன. ஓரினச்சேர்க்கை பற்றி கதைப்பதை விட, மிகப் பாரிய பிரச்சினைகள் நாட்டில் நிலவுகின்றன. ஆனால், அமைச்சரவை அமைச்சர்களுக்கு, இது குறித்து பேசுவதே முக்கியமாகி விட்டது.
இந்தவிவகாரம், மற்றைய கலாசாரமான சமூதாயத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஒரு சாதாரண பிரஜைக்காக, இந்த அரசாங்கம் எதனைச் செய்துவிட்டது. இது தற்போது தேவைப்படும் பிரச்சினையா?”என்று, இதன்போது அவர் கேள்வியெழுப்பினார்.
ஜி.எஸ்.பி வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக, ஓரினச்சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்குதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டுமா? என்றும் அவர் வினவினார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago