2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

29 ஆம் ஆண்டு நினைவேந்தல்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) அன்று இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்ப்பாட்டின் இந்த நிகழ்வு செம்மணி சந்துப் பகுதியில் காலை 9.30 மணிக்கு நடந்தது.

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் 
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 

அத்தோடு "வாசலிலே கிருசாந்தி" எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது

மேலும் இந்த நினைவேந்தலில் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம்,  வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X