2025 ஜூலை 19, சனிக்கிழமை

3 குழந்தைகள் உள்பட 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

J.A. George   / 2023 ஜூன் 22 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததுடன், மின்னல் தாக்கியதில் 9 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மின்னலால்  கையாசாக் பகுதியில் 6 பேரும் பழைய மால்டாவில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

மால்டாவைத் தாக்கிய பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் காரணமாக 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, மால்டாவில் உள்ள பாங்கிடோலா உயர்நிலை பாடசாலைக்கு அருகில் பாடசாலை நேரத்தில் மின்னல் தாக்கியதில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில், காயமடைந்த மாணவர்கள் பாங்கிடோலா கிராமப்புற மருத்துவமனை மற்றும் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X