Janu / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டியில் 37 கிலோ கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்கள் ஐவரை கைது செய்வதற்காக, இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் கற்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்தி 37 கிலோ கிராம் தங்கத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கற்பிட்டி சுற்றுவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஐவரை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் குறித்த ஐவரும் தமது வீடுகளை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 8591763 அல்லது 071 8594916 என்ற தொலைபேசி இலக்கங்களால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
எம்.யூ.எம்.சனூன்

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago