2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

4,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் வீட்டில்...

Editorial   / 2021 மே 07 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனாத் தொற்றுப்பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.

இந் நிலையில் வைத்தியசாலைகளில் படுக்கைகளுக்கான பற்றாக்குறை நிலவுவதால் 4000 மேற்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 17,795 பேர்  கொரோனாத் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 13,043  பேர் மாத்திரமே வைத்தியசாலைகளிலும் தனிமைப்படுத்த மையங்களிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

அதன்படி, 4,752  பேர் இதுவரை சிகிச்சை மையங்களுக்கோ அல்லது வைத்தியசாலைகளுக்கோ  மாற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .