R.Maheshwary / 2022 மே 08 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து 5ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, 240 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உதவியுடன், இலங்கை கடற்படையினர் ஆழ்கடலில் சுமார் மூன்று வாரங்களாக விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 630 கடல் மைல் (சுமார் 1166 கி.மீ.) தொலைவில், இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று, இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல் ஒன்றை அவதானித்துள்ளது.
அக்கப்பலை சோதனையிட முயன்றிபோது, கப்பல் தப்பிச் செல்ல முயன்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான கப்பலைத் துரத்திச் சென்ற கடற்படையினர், கப்பலில் ஏறி 07 வெளிநாட்டு சந்தேக நபர்களையும், 240 கிலோகிராம் போதைப் பொருட்களையும் கைப்பற்றினர்.
இவை 08 பைகளில் சந்தேகநபர்களால் சூட்சுமமாக மறைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்களின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago