Editorial / 2026 மார்ச் 16 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
5 கோடியே 69 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெற்றிச் சீட்டை மோசடி செய்த குற்றச்சாட்டில், லொத்தர் விற்பனையில் ஈடுபட்டு வந்த 43 வயதுடைய பெண் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் வாங்கிய 'அத கோடிபதி' லொத்தர் சீட்டிற்குப் பரிசு விழுந்துள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காக, அதனை விற்பனை செய்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.
அந்த லொத்தர் சீட்டைச் சரிபார்த்த விற்பனைப் பெண், அதற்கு எந்தப் பரிசும் விழவில்லை எனக் கூறி சீட்டைத் திருப்பி வழங்காமல் மறைத்துள்ளார். எனினும், குறித்த சீட்டிற்கு 5 கோடியே 69 இலட்சம் ரூபாய் ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளதை அந்த நபர் பின்னர் அறிந்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுப் பிரிவில் (பிரிவு 2) மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்படி, வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 43 வயதுடைய பெண் வெல்லம்பிட்டி, குருணியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago