Freelancer / 2026 பெப்ரவரி 28 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் 50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார்.
மேலும், இவர்களிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. R
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago