2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

7 வயதுச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம்

Freelancer   / 2025 மே 10 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த சிறுமி நேற்று (09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை வைத்தியசாலையின் வைத்தியர், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். 

குறித்த சிறுமி, உயிரிழப்பதற்கு முன்னர் ஒரு வார காலமாக காய்ச்சல் மற்றும் சளி காரணமாக பல தடவைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். 

எனினும், சிறுமியின் உடலில் காயங்களின் தழும்புகள் இருப்பதாக பசறை வைத்தியசாலையில் சிறுமியை பரிசோதித்த வைத்தியர் தெரிவித்துள்ளதால், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானதாக கருதப்பட்டுள்ளது. 

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல் பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

பசறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .