Editorial / 2017 ஜூலை 07 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க வைத்திய சாலைகளுக்கு ஆண்டொன்றுக்கு 8 ஆயிரம் ‘ஸ்டென்ட்ஸ்’ தேவைப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த ‘ஸ்டென்ட்ஸ்’ கொள்வனவு செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 640 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து மிகவும் தரவாய்ந்த ‘ஸ்டென்ட்ஸ்’ இறக்குமதி செய்யப்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பிய புத்திக பத்திரண, “நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர், கண்வில்லைகளை இலவசமாக வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. எனினும், அரசாங்க கண் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், இந்தக் கண்வில்லைகள் நீண்டநாட்களுக்கு நிலைக்காது. பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால், குறிப்பிட்ட மருத்துவ நிலையத்துக்குச் சென்று கண்வில்லையை வாங்கிவருமாறு ‘துண்டொன்றை’ வழங்குகின்றனர். இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, “இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்படும்” என்றார்.
47 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
49 minute ago
2 hours ago