Editorial / 2026 மார்ச் 24 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக அங்கு கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (22) இரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதன்போது, விற்பனைக்காக அன்றி, சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 800 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சட்டவிரோதச் செயலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்த நிலையத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
24 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
35 minute ago