Janu / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹாபாகே , ராகம , ஹல்லந்துருவ பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நீரில் மிதந்த நிலையில் 9 மாத பெண் சிசுவின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளது.
ஹலந்துருவ ராகம பகுதியைச் சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த சிசு காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது , தாயே தன் சிசுவை தூக்கி சென்று கிணற்றில் வீசுவது அருகிலிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது .
மேலும் சிசுவின் சடலம் பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹாபாகே பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே, தன்னுடைய சிசுவை அந்த தாய், கிணற்றில் வீசியுள்ளதாகவும், அந்த தாயின் கணவன், வத்தளையில் தொழில்புரிந்து வருவதாகவும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago