Editorial / 2019 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - வங்காலை கடற்கரை பகுதியில் கொக்கோய்ன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை, இன்று (24) அதிகாலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து இன்று (24) அதிகாலை வங்காலை கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது, வங்காலை கடற்கரை பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றுக்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பொதியை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள் வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago