S.Renuka / 2026 ஜனவரி 08 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கணக்காய்வாளர் நாயகத்தை அரசாங்கம் நியமிக்கத் தவறியமை தொடர்பில், எதிர்க்கட்சிகள் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியிடம் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
சட்டமா அதிபர் இல்லாத நிலையில், இலங்கைக்கு நிதியை விடுவிக்கும்போது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துவதாக பாராளுமன்ற வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (08) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
பொது நிதி மீதான அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது என்றும், தற்போது நாட்டில் சட்டமா அதிபர் இல்லாமல் பாராளுமன்ற விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனக்குச் சார்பான ஒரு சட்டமா அதிபரை நியமிக்க சதி செய்கிறார், இது தாமதத்திற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
9 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
6 hours ago