Freelancer / 2026 மார்ச் 04 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றும் பல அரபு நாடுகளை இலக்கு வைத்து ஈரான் நடத்தியுள்ள நேரடித் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்த நாடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை தனது ஆதரவைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிபடத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஆதரவாக நின்றதற்காக ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .