Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல் விடயத்தில், உள்ளகக் குழு உறுப்பினர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதற்காக, இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியுள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, இறுதியான முடிவை உறுதி செய்வதற்காக, இந்த அளவுகோல்களுக்கு உட்பட்டு நாங்கள் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்ந்து செல்வோமென, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உறுதியளித்தார்.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல்” மீதான தீர்மானம் A/HRC/40/L.1ஐ நிறைவேற்றுவது தொடர்பில், இலங்கைப் பிரதிநிதிகளின் தலைவராகக் காலந்துகொண்ட, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் ஆற்றப்பட்ட உரையின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அந்த உரையின் முழு விவரம் வருமாறு,
கௌரவ தலைவர் அவர்களே,
இலங்கையின் அரசியல் உறுதிப்பாட்டை அங்கிகரிப்பதற்கானதும் 2015ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கத்தால் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முற்போக்கான நடவடிக்கைகளுக்காகனதுமான ஒரு அடையாளமாக, மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மீது மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக, 2021 மார்ச் மாதம் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு கால நீடிப்பு செய்வதற்கான 40/L.1 தீர்மானம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.
இந்தச் சபையை நோக்கிய இலங்கையின் திறந்த மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறையானது, நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏழு பிரதான உள்ளக உடன்படிக்கை அமைப்பு, யூ.பி.ஆர் ஆகியவற்றுடன் நாங்கள் இணைந்துப் பணியாற்றியுள்ளதுடன், நடைமுறைகள் துரிதமாக இலங்கையினால் நிறைவேற்றப்படுவதற்காக, 1000க்கும் மேற்பட்ட சிபாரிசுகள் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுத்துள்ள விஷேட நடைமுறைக்கான அதிகாரமுடையவர்கள் மற்றும் நிபுணர்களின் 8 விஜயங்களுக்கான வசதிகள் ஏற்பத்திக் கொடுக்கப்பட்டன.
கௌரவ தலைவர் அவர்களே,
இந்த சபைக்கு முன்பாக நான் நேற்றுப் பதிவு செய்ததைப் போல, நாங்கள் எமது முன்னுரிமைகளை அமைத்துள்ளதுடன், தேசத்தின் மிக உயர்ந்த சட்டமான அரசமைப்பின் விதிகளால் வழிநடத்தப்பட்ட வகையில், நாட்டினது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான புதுமையான மற்றும் நடைமுறைத் தீர்வுகளை கண்டுபிடிப்பதற்காகவும், அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வுக்காகவும் ஈடுபட்டுள்ளோம்.
இந்த ஆண்டுக்கான தீர்மானத்துக்கு, இலங்கை அளிக்கும் இணை அனுசரணையானது, இறுதியான முடிவை உறுதி செய்வதற்காக இந்த அளவுகோல்களுக்கு உட்பட்டு நாங்கள் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்ந்து செல்வோம் என அனைத்துச் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் பெரும் அளவில் இலங்கை சமூதாயத்தினருக்கும், நாட்டுக்கு வெளியிலான எமது அனைத்து இடைத்தரகர்களுக்கும் உறுதியளிப்பதாக அமைகின்றது.
கௌரவ தலைவர் அவர்களே,
தேவைப்பாட்டுக்கு அமைவாக, பங்காளர்களிடமிருந்து நாங்கள் பெற்றுள்ள உதவிகள் மற்றும் ஒத்துழைப்பை வரவேற்பதுடன், இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடு, உண்மையான மதிப்பீடுகள், அதன் உண்மையான சவால்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, அடுத்த ஆண்டுப் பேரவையில் அறிக்கையிடுவதன் பொருட்டு, காரணிகளின் உண்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலான உரிய உள்நாட்டு நிறுவனங்கள், சுயாதீனமான அமைப்புகளுடன் நெருக்கமாக ஈடுபடுபடுவதற்காக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
கௌரவ தலைவர் அவர்களே, இறுதியாக,
உள்ளக குழு உறுப்பினர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதற்காக, இலங்கை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதுடன், இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள கருத்தொற்றுமையான வெளிப்பாட்டுக்கு ஆதரவு அளித்தமைக்காக இந்த பேரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.
21 minute ago
28 minute ago
33 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
33 minute ago
38 minute ago