Freelancer / 2024 மார்ச் 30 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52,160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். R
8 minute ago
13 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
35 minute ago
1 hours ago