2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

நல்லூரி கிராமத்தில் 17 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூரி கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட 17 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் திருகோணமலை அலுவலகத்தினால் இவ்வீடுகள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. மேலும்  45 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் தறுவாயிலுள்ளது.

சுவிஸ் கரித்தாஸ் அமைப்பின்  இலங்கைக்கான நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனினா பெலர்,  திருகோணமலை எகெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ் மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்படி வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.

மூதூர் பிரதேச   செயலக நிர்வாக கிராம அலுவலகர் கேரி.பொன்னுத்துரை, நல்லூரி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.யோகராஜா ஆகியோரின் பிரசன்னத்துடன் இவ்வீடுகள் கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .