2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு கருத்தரங்கு

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சிறுவர் நலன்களை அடிப்படையாக கொண்ட ஒரு கருத்தரங்கு அண்மையில் மூதூர், இறால்குழி கிராமத்தில் நடைபெற்றது.

இறால்குழி கிராம சேவையாளர் யோகநாதனின் ஏற்பாட்டில், அக்கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஆலய பரிபாலன சபை, கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் அபிவிருத்திச் சங்கம், மீன்பிடி சங்கம், இளைஞர் கழகம், சிறுவர் கழகம் மற்றும் சிறுவர் பாதுகாப்புக் குழு ஆகிய சங்கங்களில் இருந்து உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு சிறுவர் பாதுகாப்பு எனும் தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்தின் பிராந்திய நிகழ்ச்சித்திட்ட அதிகாரி ஆர்.அமலன் அவர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கை நடத்தினார்.

சிறுவர்களின் உரிமைகள் எவை, அது யாரால் எவ்வாறு மீறப்படுகின்றது, இதனால் சிறுவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் என்ன, இப்பிரச்சனைகளால் சிறுவர்கள் எவ்வாறு உடல் உள ரீதியாக பாதிப்படைகின்றனர் மற்றும் பெற்றோரின் கடமைகள், பொறுப்புக்கள் என்ன போன்ற பல விடயங்கள் இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. அனைத்துச் சங்கங்களில் இருந்தும் 30 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .