2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மலேஷிய பயிற்சிக்கு பொருத்தமான வகையில் ஆசிரியர் தெரிவு இடம்பெற வேண்டும்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

பொருத்தமான ஆசிரியர்களை முறையான விண்ணப்பம் கோரல் மூலம் தெரிவுசெய்யது மலேசியா பயிற்சிக்கு அனுப்ப  நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், அவசர வேண்டுகோள் ஒன்றினைக் கிழக்கு ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவிடம் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து கணித விஞ்ஞான ஆசிரியர்கள் சிலர்  மலேசியாவுக்குச் சென்று பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகின்றது. இவ்வாறு அனுப்பப்படும் ஆசிரியர்கள் மூலம் கிழக்கு மாகாணம் பயன் பெறவேண்டும்.

சுமார் 30 வருடகால யுத்தத்தினால் கிழக்கு மாகாணம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இவ்வாறான சந்தர்பங்களில் பொருத்தமான ஆசிரியர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்புவதன் மூலம் கல்வியினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பாகுபாடுகள் இல்லாதவகையில், இவ்வாசிரியர்களைத் தெரிவு செய்து கொள்வதற்கு ஆசிரியர்களிடமிருந்து பொதுவான விண்ணப்பங்களைக் கோரி அதன் மூலம் பொருத்தமான ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டு மலேசியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண ஆளுனரிடம் கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .