2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கந்தாளய் பிரதேச விவசாயிகள் சிறுபோக வேளாண்மை செய்கைக்கு தயார்

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கந்தாளய் பிரதேசத்தில் இவ்வருடத்திற்கான சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பிப்பதற்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விவசாய சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் கந்தளாய் திட்ட முகாமையாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இப்பிரதேச கந்தளாய் குளம்,வென்ராசன்புர குளம் அகிய குளங்களை நம்பி கந்தளாய், தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை ஆகிய பகுதிகளில் சிறுபோக வேளாண்மை செய்வது வழக்கம்.

இதன் பிரகாரம் சிறு போக வேளாண்மை செய்கைக்கான நீர் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி திறந்துவிடப்படவுள்ளதாகவும் ஏப்ரல் மாதம் முற்பகுதிக்குள் விதைத்து முடிக்கப்பட வேண்டும் எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நீர்பாசன திணைக்கள திட்ட முகாமையாளர், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .