2021 மே 15, சனிக்கிழமை

மூதூர் ஆசிரியை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 24 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காயங்களுடன் இளம் ஆசிரியையொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை சம்பூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கட்டைபறிச்சானைச் சேர்ந்த குருகுலசிங்கம் சிறிவதனி (வயது 27)  என்ற ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.  

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திலுள்ள சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவ் ஆசிரியை  வழமைபோன்று இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில்  பாடசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல்லும் காட்டுப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.  பிரேத பரிசோதனைக்காக சடலம் மூதூர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .