2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

த.தே.கூ. பிரதிநிதிகள் -பொதுமக்கள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

திருகோணமலையிலுள்ள நியூ சில்வஸ்டார் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது தமது அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கிராம மட்டத்திலுள்ள  மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் விளக்கமளித்தார்.

அத்துடன், பொதுநலவாய மாநாட்டின்போது தம்முடன் சந்திப்புக்களை மேற்கொண்ட அரச தலைவர்களின் நிலைப்பாடு தொடர்பிலும் அவர்  எடுத்துரைத்தார்.

மேலும்,  உள்ளூராட்சிமன்ற தலைவர், உறுப்பினர்கள்  ஒற்றுமையாகவும் சிறப்பாகவும் தமது சேவையை மக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இதில் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி,  உள்ளுராட்சிமன்றப்  பிரதிநிதிகள் கட்சி தொண்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .