2025 மே 23, வெள்ளிக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம். ஏ.பரீத்

மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நடுத்தீவு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள ஹபீப் நகர் மற்றும் ஜிஹாத் நகர் பிரதேசங்களை இணைக்கும் ஹர்பலா வீதியையும் அதனோடு இணைந்த பாலத்தினையும் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாய் செலவில் அமைப்பதற்கான வேலைத் திட்டம்,  நேற்று பி:ப 04:30 மணிக்கு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.எஸ்.தௌபீகினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர், முன்னாள் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ. எம். ஹரீஸ், முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினரான பி. ரி. எம். பைசர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ் வீதியும் பாலமும் மிக நீண்டகாலமாக சிறந்த போக்குவரத்துக்கு ஏற்றவகையில் அமைக்கப்படாமையினால் அப்பிரதேசத்தில் வாழும் சாதாரண மீனவர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் பல்வேறு போக்குவரத்துப் பிரச்சினைகளையும் அசௌகரியங்களையும் வீன் சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, இவ் வீதியும் பாலமும் சிறந்த முறையில் அமைக்கப்படுகையில், இப்பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் மிகப் பெரும் பயனுடையதாக அமையும் எனப் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X