2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அசுத்தமான முறையில் பேணப்பட்ட மூன்று கடைகளுக்குப் பூட்டு

Thipaan   / 2016 நவம்பர் 16 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எஸ். சசிக்குமார், ஏ.எம்.ஏ.பரீத்

அசுத்தமான முறையில் பேணப்பட்டமைக்காக, திருகோணமலை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாலுள்ள ஹோட்டலை ஒரு வாரத்துக்கு மூடுமாறும் திருகோணமலை பஸ் தரிப்பிடத்திலுள்ள இரண்டு ஹோட்டல்களை மூடுமாறும் கிழக்கு மாகாண  சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாஹரன் உத்தரவிட்டுள்ளார்.

கடை திறப்பதாகவிருந்தால் கடைகளை சுத்தப்படுத்திய பின்னர் அக்கடைப்பகுதியை பார்வையிடுகின்ற பொது சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியைப்பெற்று ஹோட்டல்களை திறக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

திருகோணமலை நகர் மற்றும் நிலாவெளி பகுதிகளிலுள்ள உணவகங்களின் தரத்தினத்தையும் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக விசேட சுற்றிவளைப்பு, செவ்வாய்க்கிழமை (15) மாலை நடைபெற்றது.

இதன்போது, நிலாவெளி பிரதேசத்திலுள்ள பிரபல ஹோட்டல்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், திருகோணமலை நகரில் பஸ் தரிப்பிடத்தை அண்மித்த ஹோட்டல்களையும் சுற்றிவளைத்து பாவனைக்குதவாத உணவுப்பொருட்களையும் மீட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் 26 பொது சுகாதார பரிசோதகர்களும் ஒன்றினைந்து பாரிய சுற்றிவளைப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .