2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அதிவிசேட 40 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் இருவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை நகர் பகுதிகளில் அதி விசேட சிவப்பு நிற போதை மாத்திரைகளை வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த  இளைஞர்கள் இருவரை, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸார், நேற்று (23) மாலை 3 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

 21, 24 வயதுடைய இவ்விரு இளைஞர்களிடம் தலா 225 மில்லிக்கிராம் போதை கொண்ட  40 மாத்திரைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும் போதை மாத்திரைகளையும், மேலதிக விசாரணைக்காக, திருகோணமலை தலைமையாகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஜனோஸன் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X