2025 மே 19, திங்கட்கிழமை

அதிசொகுசுக் கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவர் காயம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் அதிசொகுசு காரொன்று போட்டம்காடு ஆற்றில்  விழுந்ததில், காரில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், காருக்கு  சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக  கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாயிலிருந்து சேருநுவரவை நோக்கிப் பயணித்த அதிசொகுசு கார், நேற்று சனிக்கிழமை (13) மாலை 7. 30 மணியளவில் கந்தளாய், போராறு, போட்டம்காடு ஆற்றில் விழுந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காரினுள் பயணம் செய்த ஐந்து பேரில் ஒருவருக்கே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்ற அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X