Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், பதுர்தீன் சியானா
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதைக் கண்டித்து சந்தோசபுரம் பகுதியில் நாளை வியாழக்கிழமை அமைதிப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
பசுமை திருகோணமலை அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த அமைதிப் போராட்டத்தில் சந்தோசபுரம் பகுதி மக்களுக்கு கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டாமெனத் தெரிவித்து பல தடவைகள் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கபட்டபோதிலும், அது தொடர்பில் அக்கறை காட்டி வருவதாகவும் தொடர்ந்தும் அனல் மின் நிலையம் அமைப்பதில் அக்கறை காட்டப்படுகின்றது. இந்நிலையிலேயே, அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரி அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், இது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி மூதூர் கடற்கரைச் சேனையிலும் அமைதிப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக பசுமை திருகோணமலை அமைப்பு தெரிவித்தது.
8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago