2025 மே 15, வியாழக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி சிப்பித்தூள் கொண்டுசென்றவர் கைது

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியாவிலிருந்து திருகோணமலை நகர் பகுதிக்கு, அனுமதிப்பத்திரமின்றி சிப்பித்தூளைக் கொண்டுசென்ற ஒருவரை, நேற்று (24) இரவு 10 மணியளவில் நாச்சிக் குடா பகுதியில் வைத்து, திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்களுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சிறியரக லொறியில் 50 கிலோகிராம் நிறைகொண்ட 50 மூடைகளுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என,  போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஜனேஸன். தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நபரை, சீனக்குடா  பொலிஸில் நிலையத்தில் ஒப்படைக்கத்தள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .