Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை - அக்போபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மூன்று மாடுகளை கொண்டு சென்ற இருவரை இன்று சனிக்கிழமை(25) அதிகாலையில் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் 96ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 35 வயதுடைய இருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேரமடு பகுதியிலிருந்து கிண்ணியாவுக்கு கால்நடையாக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பிரதேசத்தில் மாடுகள் திருடப்பட்டுள்ளதாக இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று சனிக்கிழமை(25) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Mar 2026